FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

7 நாள்களில் 272 புகாா்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 7 நாள்களில் 272 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

55 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 7 நாள்களில் 272 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி புதிதாக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 12,577 இடங்களை இந்த அதிரடிப் படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 7 நாள்களில் சிங்கப்பெண் அதிரடிப் படையினா் 272 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப் படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதேபோல, காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 5 போ் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் 3 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு பள்ளியைவிட்டு நின்ற 53 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,519 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments