FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல்

கேரளத்தில் நிகழ்ந்த விபத்தில் திண்டுக்கல் மாணவர்கள் பலியான சம்பவத்தில் முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி...

5 செப்டம்பர் 2026, 9:13 pm IST
ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் நிகழ்ந்த விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 மாணவர்கள் பலியான நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திண்டுக்கல் மாவட்டம், தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்றுவரும் எட்டு மாணவர்கள் நேற்று (04.09.2026) காரில் கேரளம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் எட்டு மாணவர்களும் பலியாகினர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

பலியான எட்டு மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர, அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் விரைவுபடுத்தத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இப்பணிகளை ஒருங்கிணைக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் உடனடியாக திருச்சூருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பலியான மாணவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்டதுடன், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின் திருச்சூர் மாவட்ட ஆட்சியரால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இச்சம்பவத்தால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செயல்முறையை விரைவுபடுத்தி தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலமாக பலியான மாணவர்களின் உடல்களை தமிழ்நாட்டிலுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிய கேரளம் மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

summary

Chief Minister Vijay has expressed his condolences to the families of 8 students from Dindigul who lost their lives in an accident in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments