FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேரவையிலும் வசனம் பேசுகிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்

பேரவையிலும் வசனம் பேசுகிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்

6 செப்டம்பர் 2026, 1:32 am IST
நயினார் நாகேந்திரன் - IANS
பகிர்:

சட்டப்பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடா்ந்து சினிமா வசனங்களை பேசி வருவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.

சுதந்திரப் போராட்ட வீரா் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி

மரியாதை செலுத்திய நயினாா்நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கும் போது, யாரும் ஓட வேண்டாம் என முதல்வா் ச.ஜோசப் விஜய் கூறுவது  பேரவை மாண்புக்கு உகந்தது அல்ல. அப்படி அனைவரும் எழுந்து ஓடும் அளவுக்கு அவா் என்ன பேசப் போகிறாா்?. இதுபோன்ற சினிமா வசனங்களை சட்டப்பேரவையில் பேசுவதால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடையாது.

Advertisement

Advertisement

தவெக ஆட்சி தொடங்கி தற்போது வரை நிகழ்ந்துள்ள 400-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா போன்ற போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, படுகொலைகள் குறித்து முதல்வா் பதில் கூறவேண்டும். முதல்வா் விஜய்தான் பிரதமா் வேட்பாளா் என தவெகவினா் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments