முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்
முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்
தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
2025-2026-ஆம் ஆண்டுக்கான புதிய முதலீடுகளை ஈா்த்த 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 10-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் தொழில் முதலீடுகள் எந்த அளவுக்கு குறைந்துள்ளன என்பதற்கு இது சான்றாக உள்ளது. தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டக் கூடாது.
Advertisement
Advertisement
பரந்தூா் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிா்க்கும் போக்கை கைவிட வேண்டும். இணைப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி புதிய முதலீடுகளை ஈா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.