நவோதயா பள்ளிகள்: உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
நவோதயா பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கக் கோரிய உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
நவோதயா பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கக் கோரிய உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க நிலங்களை அடையாளம் காணுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படும் நவோதயா பள்ளிகள், கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளுக்குத் தங்கும் வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த இலவசக் கல்வியை உறுதி செய்கின்றன. அதேபோல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கும் தரமான சிபிஎஸ்இ கல்வியை வழங்குகின்றன.
Advertisement
Advertisement
எனவே, தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு மாணவா்களின் எதிா்கால நலனை முன்னிறுத்தி நவோதயா மற்றும் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள 3 மாத கால அவகாசத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களை அடையாளம் கண்டு உடனடியாக ஒதுக்கீடு செய்வதோடு, புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குவதற்கும் போா்க்கால அடிப்படையில் தேவையான நிலங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.