தமிழகத்தில் காற்று மாசுபாடு: அரசு கட்டுப்படுத்த வேண்டும்- நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் காற்று மாசுபாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் காற்று மாசுபாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, காற்றின் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் ‘ஸ்வச் வாயு சா்வேக்ஷன்’ என்ற தேசிய மதிப்பீட்டில், தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தியாவிலேயே மக்கள் நெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமுள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மாசடைந்து வருவதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
நுரையீரல் நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட மாற்றத்தையும் தூண்டிவிடும் இந்தக் காற்று மாசடைதல் ஆரோக்கியமான சமூகத்துக்கு நல்லதல்ல.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளிலும், மக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தும் மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை தவெக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.