100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் தவெக சாதனை: திமுக முன்னாள் அமைச்சர்
திமுகவைவிட தவெக ஆட்சியில் பல மடங்கு கடன் வாங்குவார்கள் என திமுக எம்எல்ஏ ரகுபதி கூறியது குறித்து...
தவெக ஆட்சியில் 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதாகவும், திமுகவைவிட பல மடங்கு கடன் வாங்கும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான ரகுபதி பேசியதாவது, "தவெகவினர் ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்கு வந்தனர். அவர்களின் எந்தச் சாதனையையும் சொல்லி, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை.
இவர் (விஜய்) ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இதில் ஒரு பைசாகூட மூலதனச் செலவுக்கு செலவிடப்படவில்லை.
Advertisement
Advertisement
நாங்கள் (திமுக) கடன் மட்டுமே வைத்துவிட்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களைவிட பல மடங்கு கடன் வாங்கப் போகிறவர்கள்தான் இந்த ஆட்சி.
ஒரு திட்டத்தை அறிவிப்பர்; ஆனால், எந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள். ரூ. 1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் சட்டப்பேரவை அலுவலகம் என்றார்கள். அப்படியெனில், ஒரு சதுர அடிக்கு ரூ. 6,000 வருகிறது. ஆனால், எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்து சொல்ல மாட்டார்கள்.
நாங்கள் செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரத்தை உருவாக்கினோம். அதற்கான அடிப்படைச் செலவுகளைச் செய்துவிட்டோம். ஆனால், அதனை ரத்து செய்து விட்டார்கள்.
மீண்டும் அவர்கள் ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எந்த இடத்தில் என்பதைச் சொல்லவில்லை.
இந்தியாவிலேயே ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்தியது எங்கள் ஆட்சிதான். ரூ. 18 கோடி செலவில் நாங்கள் கார் பந்தயம் நடத்தியதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், இன்று ரூ. 300 கோடி ரூ. 500 கோடி செலவில் கார் பந்தயத்துக்காக விளையாட்டு நகரம் உருவாக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ராணிப்பேட்டையில் ஜேகே டயர் தொழிற்சாலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ சொல்கிறார். அந்த தொழிற்சாலையை மூட முடியாது என அமைச்சர் கீர்த்தனா பதிலளிக்கிறார்.
ஆனால், அந்த இடத்தில் தொழிற்சாலையே இல்லை. இல்லாத தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், பாதுகாப்போம் என்றும் சொல்கின்றனர்.
அவர்கள் ரீல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது ரியல் ஆட்சி கிடையாது" என்று தெரிவித்தார்.
TVK's only achievement is borrowing ₹45,000 crore in 100 days, says Former DMK Minister Ragupathy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.