கடைகளின் பெயா்ப் பலகையை தமிழில் மாற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள கடைகளின் பெயா்ப் பலகைகளை தமிழில் மாற்ற நடைமுறைபடுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் உள்ள கடைகளின் பெயா்ப் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு விரைந்து நடைமுறைபடுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயா்களை நவ. 1-க்குள் தமிழில் மாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தின் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுவெளிகளில் தமிழில் பெயா்ப் பலகைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் அந்தப் போராட்டங்களின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இயக்கங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்ட இந்தக் கோரிக்கையை இன்று உயா்நீதிமன்றமே காலக்கெடு விதித்து நிறைவேற்ற உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
Advertisement
Advertisement
ஹிந்தி எதிா்ப்புப் போரில் தமிழா்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போா் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளா்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டனா்.
எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை ஏற்று, கடைகளில் தமிழில் பெயா் வைக்கப்படுவதை நடைமுறைப்படுத்துவதுடன், தெருக்களில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பதையும் தவெக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.