அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிப்பார்: அமைச்சர் அருண்ராஜ்
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தது குறித்து...
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தவெக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் நன்றாக தயாராகி, திங்கள்கிழமை பதில் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 3) தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை விளக்கமாக பதிலளிப்பேன். நான் பேரவையில் இல்லையென்றாலும் அனைத்து கேள்விகளும் எனக்கு வந்துவிடும். தெளிவான பதிலளிப்பேன்.
Advertisement
Advertisement
ஆனால், உங்கள் மூலம் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நான் பேசும்போது யாரும் ஓடக் கூடாது என சத்தியம் செய்யுங்கள்" என்று கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் இன்று பேசியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்லாமல் அனைத்துத் தலைவர்களும் கேள்வி கேட்டனர். அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிப்பார். இந்த அரசும், ஜனநாயகமும், சட்டப்பேரவையும் மக்களுக்கானவை.
முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர், அமைச்சர் என யாராக இருந்தாலும் சட்டப்பேரவையில் எதுவேண்டுமானாலும் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களுடைய பேச்சு, மக்களின் உணர்வுகளையும் மனநிலைகளையும் பிரதிபலிக்க வேண்டும்.
வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய உரையானது, திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டதாகவும், கடந்த 100 நாள்களில் மட்டுமே அது சீர்குலைந்துள்ளதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், நிலைமை அப்படி இல்லை, அது அனைவருக்கும் தெரியும் என்று அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிட்டார்.
Health and Family Welfare Minister Arunraj stated on Sunday (Sept. 6) that Chief Minister Vijay would answer all questions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.