‘பாம்புக்கடிக்கு நாக தோஷம் கழிக்க பிரார்த்தனை இருக்கிறதா?’ ஓபிஎஸ் பேச்சால் சிரிப்பலை!
பாம்புக்கடிக்கு தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை...
பாம்புக்கடிக்கு தோஷ நிவர்த்திதான் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
வாரத்தின் மூன்றாம் நாளான இன்று காலை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதிலை அத்துறையின் அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார். பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் நிலவி வரும் பாம்புக்கடி பிரச்னை பற்றி கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே திடீரென எழுந்த முன்னாள் முதல்வரும் திமுக எம்.எல்.ஏ.வுமான ஓ. பன்னீர்செல்வம், “கேள்வி நேரம் தொடங்கி 29 நிமிடங்களாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் பாம்புக்கடி குறித்து பேசி வருகிறார். பாம்புக்கடி இருக்கும் இடங்களில் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். அந்த தொகுதிகளில் நாகதோஷம் கழிப்பதற்கு அரசு ஏதேனும் பிரார்த்தனைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கலகலப்பாக பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
Advertisement
Advertisement
ஓ. பன்னீர்செல்வத்துக்குப் பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமாக மட்டுமே இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். பில்லி, சூனியம் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிக்கு ஏதேனும் தோஷம் இருந்தால் நிவர்த்தி செய்யலாம். இங்கு ஜலதோஷம் தான் அதிகமாக உள்ளது. பாம்புக்கடி தோஷம் இல்லை. தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை” என்றார்.
மீண்டும் எழுந்த ஓ. பன்னீர்செல்வம், “அமைச்சர் விரும்பினால் தோஷம் கழிக்கும் நபர்களை அனுப்பி வைப்பேன்” என்று நகைச்சுவையுடன் கூற மீண்டும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பெரியாரிய இயக்கம் பேசிய திமுக இன்று தோஷம் கழிப்பது பற்றி பேசுகின்றனர். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள் அறிவியல் பூர்வமாக மட்டுமே நாங்கள் அணுகுவோம்” என்றார்.
Laughter erupted in the Legislative Assembly after former Chief Minister O. Panneerselvam remarked that a ritual to remedy the ill effects caused by a snakebite should be performed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.