FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சு

காவிரி பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியது பற்றி...

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 11:15 am IST
ஓ. பன்னீர்செல்வம் - TN
பகிர்:

காவிரி பிரச்னையில் கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தைக்குச் செல்வது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நல்லதல்ல என்றும் போராடி பெற்ற உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

பேரவையில் பேசிய அவர் "தமிழ்நாடு எப்போதும் கர்நாடகத்தை பகை மாநிலமாக கருதியதில்லை. அவர்களும் நம்மைப்போலதான் இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அவர்கள் யார் என்று காட்டிவிட்டார்கள். பேச்சுவார்த்தை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டுவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். மீண்டும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை என்பது விவசாயிகளுக்கும் நல்லதல்ல, நாம் பெற்ற உரிமைகளுக்கும் நல்லதல்ல.

Advertisement

Advertisement

தமிழ்நாடு எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. காவிரி பிரச்னைக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.

முன்னாள் முதல்வர்கள், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர்கள் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகம் எதற்குமே வளைந்துகொடுக்காததால்தான் நீதிமன்றம் சென்றோம்.

முதலில் காவிரி பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது திமுக ஆட்சியில்தான், கருணாநிதி ஆட்சியில்தான். ஜெயலலிதாவும் நேரடியாக பேசினார்கள். அது எதுவும் வேலைக்கு ஆகாத நிலையில்தான் நீதிமன்றத்திடம் சென்று இறுதித் தீர்ப்பைப் பெற்றோம்.

சட்டப்படி கிடைத்த உரிமையை பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது" என்றார்.

summary

It is not right for Chief Minister Vijay to hold talks with Karnataka: OPS in tn assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments