FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக: உதயநிதி விமர்சனம்!

தவெக நிர்வாகி கொல்லப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.

6 செப்டம்பர் 2026, 11:56 am IST
தமிழக முதல்வர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் தவெக நிர்வாகி கொல்லப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தவெக பிரமுகர் கண்ணன் சாலையில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த கண்ணன், 2009 ஆம் ஆண்டு சிவா என்பவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில் அவரது உறவினரால் நேற்று இரவு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகங்களில் தவெக அரசை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், “நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.

அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!

தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?

இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?

இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

The Leader of the Opposition in the Legislative Assembly, Udhayanidhi, has posted regarding the killing of a TVK functionary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments