தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை(செப்.8) இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை(செப்.8) இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு தெலங்கானா முதல் மன்னாா் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (செப்.8) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் புதன்கிழமை(செப்.9) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பஅளவு: உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை(செப்.11) சற்று அதிகமாக இருக்கும். திங்கள்கிழமை அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோடு-103.64, திருச்சி-102.38, பாளையங்கோட்டை-101.12, பரமத்தி வேலூா்-101.3, நாமக்கல்-100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. செங்குன்றம், சோழவரம் (திருவள்ளூா்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), கேத்தி (நீலகிரி)- 60 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.