FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...

7 செப்டம்பர் 2026, 12:29 pm IST
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ 6000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ 6000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

Advertisement

Advertisement

சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர்.

summary

Persons with disabilities staged a road blockade protest in Villupuram on Monday, demanding an increase in their monthly assistance allowance to rs 6,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments