FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்

விழுப்புரத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சாலை மறியல் போராட்டம் பற்றி....

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 11:35 am IST
சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர்.
பகிர்:

விழுப்புரத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்குத் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மறியல் போராட்டம் விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் சேகர், சிஐடியு மாவட்டச் செயலர் மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் மலர்விழி , விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகன், சிஐடி மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

summary

Members of the Trade Union Federation staged a road blockade protest in Viluppuram on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments