FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

28.7.1976: போக்குவரத்தை கண்காணிக்க மவுண்ட் ரோடில் டெலிவிஷன் காமிரா

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

Updated On : 28 ஜூலை 2026, 4:00 am IST
27.7.1976 - Dinamani
பகிர்:

சென்னை, ஜூலை. 27- சென்னை ஒழுங்குபடுத்தும் நகரில் போக்குவரத்தை மேலும் செம்மையாக பொருட்டு, நகரில் போக்குவரத்து மிக அதிகமாக உள்ள 12 இடங்களில் போக்குவரத்து நிலைமையை படம் பிடித்துக் காட்டுவதற்கென 12 டெலிவிஷன் காமிரா சாதனங்கள் அமைக்கப்படும். சென்னை ரவுண்டானாவிலும், சென்டிரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி ஹைரோடிலும் இவ்விதம் டெலிவிஷன் காமிரா சாதனங்களை நிறுவும் வேலை அடுத்த வாரம் துவங்கும்.

போக்குவரத்தைக் கண்காணிக்கும் டெலிவிஷன் ஏற்பாட்டை நிறுவ சென்னை நகர போலீசுக்கு உலக பாங்கு இடைக்கால ரீதியாக ரூ. 33 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.

இது பற்றி சென்னை நகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்துப் பிரிவு) ஜி. வீரராகவன் மேலும் கூறுகையில் உலக பாங்கின் போக்குவரத்து, நிபுணர் கே டபிள்யூ. ஹூட்டர்ட், நகரப் போக்குவரத்து போலீசாரின் பணி பற்றி திருப்தியடைந்து அதன் பேரிலேயே நிதி உதவிக்கான சிபாரிசுகளைச் செய்ததாக நமது நிருபரிடம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு டெலிவிஷன் சாதனத்தை பயன்படுத்தும் ஏற்பாட்டின் கீழ் அதிக போக்குவரத்துள்ள இடங்களில் கண்காணிப்பு யூனிட்டுகள் அமைக்கப்படும். துணை கமிஷனர் அலுவலகத்தில் அமைந்த போக்குவரத்து கண்ட்ரோல் ரூமிலிருந்து இவை கம்பி இணைப்பு மூலம் இயக்கப்படும். ...

ஒரு ஹைகோர்ட்டிலிருந்து வேறு ஹைகோர்ட்டுக்கு வழக்கு மாற்றும் அதிகாரம்

புதுடில்லி, ஜூலை, 27 - ஒரு ஹைகோர்ட்டிலுள்ள வழக்குகளை வேறு ஒரு ஹைகோர்ட்டுக்கு மாற்றுவதற்கான அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இருக்கும் வகையில் அரசியல் சாஸனத்தில் திருத்தங்கள் இயற்ற வேண்டும் என்று சுவரண்சிங் குழு சிபாரிசு செய்துள்ளது.

பொது நல அக்கறைக்குரிய முக்கியமான பிரச்னையில் வழக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட ஹைகோர்ட்டுகளில் எழுப்பப்படுமானால், சுப்ரீம் கோர்ட்டு தானாகவே அவ்வழக்குகளை எடுத்துக்கொள்வதற்கான அதிகாரம் இருக்க வேண்டுமென்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவின் கடைசி தவணை பிரேரணைகளில் இந்த சிபாரிசுகள் இடம் பெற்றுள்ளன.

கமிட்டி தன்னுடைய முந்திய பிரேரணைகளில், சட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் சம்பந்தமாக நீதிமன்றப் பரிசீலனை அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், அடிப்படைக் கடமைகள் அத்தியாயத்தைச் சேர்க்கவும் சிபாரிசு செய்திருந்தது.

மாநிலங்களில் பிரதான கோர்ட்டுகளும் அதிக அந்தஸ்துள்ளவையுமான ஹைகோர்ட்டுகளின் அதிகாரம், கண்ணியம் ஆகியவை, அந்தக் கோர்ட்டுகளின் மீது சுப்ரீம்கோர்ட்டின் நிர்வாகக் கட்டுப்பாட்டினால் பாதிக்கப்படலாகாது என்ற நிலையை சுவரண்சிங் கமிட்டி மேற்கொண்டுள்ளது. ...

summary

28.7.1976: Television camera on Mount Road to monitor traffic.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments