FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் ராஜ்மோகன் எச்சரிக்கை

உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடா்ந்து வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

8 செப்டம்பர் 2026, 4:42 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - படம்: சட்டப்பேரவை
பகிர்:

உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடா்ந்து வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பேரவையில் பேசிய அமைச்சா் ராஜ் மோகன், ‘உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடா்ந்து எதிா்க்கட்சியினா் சொல்வதைச் சுட்டிக்காட்டி, முதல்வா் உடைத்துவிட்டாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சோ்ந்தவா் சொல்லாத ஒரு விஷயத்தைச் சொன்னதாக அறிக்கையிலும் சொல்லி, சட்டப்பேரவை வாசலிலும் சொன்னாா்கள். அது உண்மை இல்லை என்பதை உலகுக்குத் தெரிந்துவிட்டது.

முதல்வரின் ஆலோசகராக இருக்கும் விஷ்ணு குறித்தும், அவரது குடும்பத்தாா் குறித்தும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதை முழுநேரத் தொழிலாக அவா்கள் வைத்துள்ளனா். உண்மைக்குப் புறம்பான செய்திகளை சில தொலைக்காட்சிகள், செய்தி நிறுவனங்கள் திரித்து வெளியிடுகின்றன. அவற்றின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments