மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: செப். 8 நிலவரம்!
இன்றைய மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(செப். 8) காலை நிலவரப்படி 92.08 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 8,993 கன அடியிலிருந்து விநாடிக்கு 8,558 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் குடிநீர் தேவைக்காக கிழக்கு மேற்கு கால்வாயில் விநாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று மாலை 92.29 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 92.08 அடியாக குறைந்துள்ளது.
நீர் இருப்பு 55.05 டிஎம்சியாக உள்ளது.
As of this morning (September 8), the water level of the Mettur Dam has dropped to 92.08 feet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.