FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!

திருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம் என அறிவிப்பு.

58 வினாடிகள் முன்பு
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க உருவாக்கப்பட்டுள்ள பெட்டகம். - படம்: தினமணி
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களில் உள்ள மூலவர், உற்சவர் உள்ளிட்ட உள்பிரகாரங்களில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில், கைப்பேசி, கேமரா, டேப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் இந்தத் தடை செப். 1-ல் அமல்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் செயல்பட்ட வந்த பாதுகாப்புப் பெட்டக கவுன்டர்கள் இன்று(செப். 8) மூடப்பட்டுள்ளன. இதனால் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதற்கான தடை, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இதனால், திருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடையில்லை என்றும் தரிசனத்தின்போது செல்போனை அணைக்க(switch off) வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

summary

The temple administration has announced that permission has been granted to carry mobile phones inside the Thiruttani Murugan Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments