மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம் தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,718 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடகம், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறக்க மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(செப். 9) மாலை நிலவரப்படி, விநாடிக்கு 4,822 கன அடியிலிருந்து விநாடிக்கு 3,718 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 91.50 அடியிலிருந்து 91.28 அடியாக குறைந்துள்ளது.
நீர் இருப்பு 54.12 டிஎம்சியாக உள்ளது.
Water inflow into Mettur Dam has decreased to 3,718 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.