FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பக்தர்களை கவரும் கோவா கடற்கரையில் இளநீர் குடிக்கும் விநாயகர் சிலை!

கோவா கடற்கரையில் இளநீர் குடிக்கும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறித்து...

14 செப்டம்பர் 2026, 6:46 pm IST
பக்தர்களை கவரும் கோவா கடற்கரையில் இளநீர் குடிக்கும் விநாயகர் சிலை! - படம்: தினமணி
பகிர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் கொசப்பேட்டையில் கோவா கடற்கரையில் இளநீர் குடிக்கும் விநாயகர் சிலை பக்தர்களை கவர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் விநாயகரை வழிபட்டு, கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் தெருவில், வித்தியாசமான முறையில், விநாயகர் கோவா கடற்கரையில் அமர்ந்து, இளநீர் குடிப்பது போன்ற தத்ரூப காட்சி சிலையை வடிவமைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதில், விநாயகர் கோவா கடற்கரையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, நீச்சல் உடை அணிந்து, இளநீர் குடிப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பின்னணியில் கடற்கரை, தென்னை மரங்கள், மஞ்சு குடை, பெரம்பு நாற்காலி போன்றவற்றை அமைத்துள்ளனர்.

இந்த வித்தியாசமான விநாயகர் சிலையை காண, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

பலரும் விநாயகர் சிலை முன்பு நின்று, சுயப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கோவா கடற்கரை பின்னணி கொண்ட இந்த விநாயகர் அலங்காரம், தற்போது வேலூரில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

summary

In connection with Vinayagar Chaturthi, a statue of Lord Vinayaga depicted sipping tender coconut on a Goa beach has captivated devotees in Kosapet, Vellore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments