FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

1,100 நோட்டுப் புத்தகங்களால் உருவான ஞான கணபதி

விநாயகர் சிலைகளை எங்கே கரைப்பது என்பதில் கருத்து வேறுபாடுகளும், நீதிமன்ற வழக்குகளும், பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளும், காவல் துறையின் கெடுபிடிகளும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கின்றன.

26 செப்டம்பர் 2026, 8:21 pm IST
பகிர்:

ஆர்.எஸ்.

விநாயகர் சிலைகளை எங்கே கரைப்பது என்பதில் கருத்து வேறுபாடுகளும், நீதிமன்ற வழக்குகளும், பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளும், காவல் துறையின் கெடுபிடிகளும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத, பசுமை விநாயகர் சிலைகள் குறித்தும் பேசப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அதிதி மிட்டல், கரைப்பதற்கு அவசியம் இல்லாமல், விநாயகரைப் பிரித்து, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும்படியான சிலைகளை அமைத்துக் கொண்டாடி வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு, பள்ளி மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள் மூலம் விநாயகர் சிலையை உருவாக்கினார். 1,100 நோட்டுப்புத்தகங்களால் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது.

நோட்டுப் புத்தகங்களை கீழிருந்து அடுக்கி வைத்து, தேவைப்படும் இடங்களில் நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்து விநாயகர் சிலையை உருவாக்கினார். இந்தச் சிலைக்கு அவர் 'ஞான கணபதி' என்று பெயர் சூட்டினார். அதைக் கரைப்பதற்கான நாள் வந்தபோது, சிலைக்கு பூஜை செய்து , பின்னர் அந்த நோட்டுப் புத்தகங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டார். பல் மருத்துவராகப் பணியாற்றி வரும் அதிதி மிட்டல், இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். பசுமை இயக்கச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கைப் பொருள்களைக் கொண்டு சிலை செய்கிறார். பிறகு பூஜை முடிந்த பின்னர் அந்தப் பொருள்களைப் பிரித்து அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுத்து விடுகிறார்.

முந்தைய ஆண்டு இவர் துôய்மை இயக்கத்தை வலியுறுத்தும் விதமாக 'சோப் கணபதி' தயாரித்தார். 2,655 சோப்புக் கட்டிகளைக் கொண்டு விநாயகர் சிலை செய்தார். விசர்ஜனம் செய்யும்போது, இந்த சோப்புகளை குடிசைப் பகுதியில் வாழும் ஏழைகளுக்கு இலவசமாக விநியோகித்தார்.

அதற்கு முந்தைய ஆண்டு 'தேங்காய் கணபதி' செய்தார். 201 முழுத் தேங்காய் கொண்டு அமைக்கப்பட்ட இந்த விநாயகர் சிலையை, விசர்ஜன நேரத்தில் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார்.

அதற்கும் முந்தைய ஆண்டில் 108 தர்பூசணி பழங்களைக் கொண்டு விநாயகர் சிலை அமைத்தார். வெறும் நெய்விளக்குகளால் ஒரு கணபதி சிலையையும் இவர் முந்தைய ஆண்டுகளில் உருவாக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments