அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாது! தமிழக அரசு
விநாயகர் சிலைகளைக் கரைப்பது தொடர்பான விதிகள் பின்பற்றப்படும் என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு உறுதி...
விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம் வழங்கி தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஹரிஹரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என்று தெரிவித்திருந்தது. அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்தாண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில், சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்றும், இதுசம்பந்தமாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மேலும் ஒருநாள் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய நடுவர், விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன, கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முடிந்தபிறகு, நடப்பாண்டு சிலைகளைக் கரைப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினர்.
பின்னர், அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் வழங்கி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.
Vinayagar idols will not be immersed at Neelankarai and Pattinapakkam from next year: TN govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.