பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது! தீர்ப்பாயம்
பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பட்டினம்பாக்கம், நீலாங்கரை, கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், விநாயகர் சிலைகளை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் 2023-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகியன சிலைகள் கரைப்பதற்கான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியது.
Advertisement
Advertisement
அதற்கு மனுதாரர் தரப்பு, பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளாக உள்ளதால் அங்கு சிலைகளை கரைக்க அனுமதிக்க கூடாது என்று கோரியது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கு செல்லும் சிலைகளை மற்ற பகுதிகளுக்கு ஏன் மாற்றிவிடக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பிய நிலையில்,
வேறு பகுதிக்கு மாற்றுவதில் சட்டம் - ஒழுங்கு, கூட்ட நெரிசல், மதரீதியாக பதற்றமான பகுதிகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று தமிழக அரசு கூறியது.
பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதிகளுக்கு வரும் விநாயகர் சிலைகளை வேறு இடங்களுக்கு மாற்றிவிடுவது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Immersion of Vinayagar idols cannot be permitted in the Pattinapakkam, Neelankarai areas: NGT
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.