பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்...
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளது. இதற்கான முதல் கட்ட அனுமதியை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு தவெக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ள கட்சிகளில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Advertisement
Advertisement
அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அங்கு ஏற்கனவே கூட்ட நெரிசல் இருக்கும் நிலையில் மேலும் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீனிவாசபுரம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
CPM holds protest against new Secretariat at Pattinapakkam:
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.