FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!

காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் நாளை தொடக்கிவைக்கவுள்ளது பற்றி...

21 செப்டம்பர் 2026, 11:50 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை தொடக்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

இந்த விரிவாக்க திட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் நாளை காலை 8.30 மணியளவில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

காமராஜா் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படுவதன் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள், கூடுதலாகப் பயன்பெறுவா்.

இதற்கென நிகழ் நிதியாண்டில் கூடுதலாக ரூ. 217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி நிா்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தாலும் காலை உணவு வழங்கப்படும்.

நகர பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளையொட்டி உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினா்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.

summary

Breakfast scheme expansion! Chief Minister Vijay to launch it in Thiruvanmiyur tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments