FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாகிறது!

கிழக்கு - மத்திய வங்கக்கடல்பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று உருவாகவுள்ளது குறித்து...

51 வினாடிகள் முன்பு
மழை
பகிர்:

கிழக்கு - மத்திய வங்கக்கடல்பகுதி களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (செப். 21) உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று முன்தினம் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (செப். 20) கிழக்கு-மத்திய வங்கக்கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

Advertisement

Advertisement

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று கிழக்கு-மத்திய வங்கக்கடல்பகுதி களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (செப். 22) மேற்கு-மத்திய வங்கக்கடல்பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவடையக்கூடும்.

இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

Weather update A low pressure area is forming today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments