FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளியானது முதல்வர் விஜய்யின் கடிதம்... தனியார்மயமாகிறதா சென்னை விமான நிலையம்?

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் வெளியானதைப் பற்றி...

23 செப்டம்பர் 2026, 12:22 pm IST
முதல்வர் விஜய் - பிரதமர் மோடி - (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து 'இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை' (ஏஏஐ) நீக்கிவிட்டு, அந்த பொறுப்பை தனியாருக்கு ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதனை மறைத்து வைத்திருந்ததாகவும் கடந்த செப். 19 ஆம் தேதி தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய், கடந்த ஆக. 5 ஆம் தேதி எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் நகல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இணையத்தில் வெளியான கடிதத்தில், “சென்னை சர்வதேச விமான நிலையத்தின் மோசமான செயல்பாடுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னை விமான நிலையம் கடினமாக கட்டத்தை எட்டியிருக்கிறது. ஏப்ரல் 2026 நிலவரப்படி, பயணிகளின் வருகையில் கொல்கத்தாவிற்குப் பின்னால் 6-ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது சென்னை விமான நிலையம்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 2.7 கோடி பணிகளாக இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன் இது ஆண்டுக்கு 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 - 26 நிதியாண்டிற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிக்கையில் இந்த விமான நிலையம் 2.31 கோடி பயணிகளை மட்டுமே கையாண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு மே மாதத்தில், சென்னையில் மொத்த சரக்கு விமானங்களின் இயக்கம் 6 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது. அதேசமயம் பெங்களூரு 14.5% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

2025-26 நிதியாண்டில், சென்னை விமான நிலையம் 1,58,702 விமானங்களை மட்டுமே கையாண்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக உள்நாட்டு விமானங்கள் சுமார் 320 ஆகவும், சர்வதேச விமானங்கள் ஒரு நாளைக்கு 115 ஆகவும் என சுமார் 435 விமானங்கள் கையாளப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு மத்தியில் சென்னை விமான நிலையத்தில் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.

முறையாகப் பராமரிக்கப்படாத கழிவறைகள், பயணிகள் அமரும் பகுதிகளில் மாசுபாடு மற்றும் குளிரூட்டும் சாதனங்களில் பழுது, விமான நிலைய முனையங்களை அணுகுவதில் உள்ள சிரமங்கள், முறைப்படுத்தப்படாத டாக்ஸி சேவைகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதவை, அடிப்படை பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு பிரச்சினைகள் பற்றி பயணிகளும், உலகளாவிய முதலீட்டாளர்களும் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

வலிமையான பொருளாதார கட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழிற்துறை, வாகன உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சுற்றுலா ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாகத் திகழும் சென்னையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் அவசியமாகிறது.

பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்குககளைக் கையாளும் திறன் என எதுவாக இருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவை. ஆனால், விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகள் மாநிலத்தின் பொருளாதார வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கேற்ற சிறப்பான விமான நிலையமும் திறமையான நிர்வாகமும் இன்றியமையாதது என்பதால், சென்னை விமான நிலையத்தை தற்போது நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை மாற்றிவிட்டு, வேறு நிறுவனத்திடம் நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நிர்வகித்து வரும் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாருக்கோ வேறொரு நிறுவனத்துக்கோ மாற்றவும் நான் வலியுறுத்துகிறேன்” என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

In a significant development, Chief Minister C. Joseph Vijay has written to Prime Minister Narendra Modi seeking to change the operator of the Chennai airport. Unhappy with a few aspects of the airport, the State has asked the Centre to bring in an operator other than the Airports Authority of India (AAI)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments