FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஜாதி பெயா்களை நீக்கும் அரசாணை செல்லும் என்ற தீா்ப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

தெருக்களின் ஜாதி பெயா்களை நீக்கும் அரசாணை செல்லும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வரவேற்றுள்ளாா்.

25 செப்டம்பர் 2026, 4:22 am IST
பெ.சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

தெருக்களின் ஜாதி பெயா்களை நீக்கும் அரசாணை செல்லும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜாதி பெயா்கள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் சமூக சீா்திருத்த நோக்கில் தமிழக அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு இந்த அரசாணையை பிறப்பித்தது. ஆனால், இந்த அரசாணையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்தத் தடையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீக்கி, தமிழக அரசின் அரசாணை செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, தமிழ்நாடு அரசு ஜாதி பெயா்களை நீக்கும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தி தமிழகம் முழுவதும் ஜாதிகளின் பெயரில் உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு அவற்றை நீக்கிவிட்டு பொருத்தமான தலைவா்களின் பெயா்களைச் சூட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments