ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசு; இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜி.கே. வாசன் அறிவிப்பு...
அக். 6ல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய த.வெ.க. அரசு விளங்குகிறது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
பெருந்தலைவர் காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற த.வெ.க வின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய், மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக குறைந்த நாள்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.
இதன் மூலம் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே புதிய த.வெ.க. அரசின் நல்ல தூய முயற்சிக்கு, நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் த.வெ.க கூட்டணிக்கு தமிழ் காங்கிரஸ்(மூ) ஆதரவளிக்கிறது என்பதை த.மா.கா.(மூ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தமாகா, கடந்த 2026 ஜூன் மாதம் கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Support for TVK in Maduranthakam and Dharapuram by-elections: G.K. Vasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.