FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவள்ளூர்: காலை உணவில் பல்லி! 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

திருவள்ளூர் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி...

23 வினாடிகள் முன்பு
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - X
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டையூர் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூரை அடுத்த கொட்டையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது.

அந்த பள்ளியில் 36 பேர் இன்று காலை உணவு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. உணவு சாப்பிட்டவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து மாணவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே காலை உணவைச் சோதித்துப் பார்த்ததில் அதில் பல்லி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Thiruvallur: Lizard found in breakfast! 36 students admitted to hospital

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments