FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

50 ஆவது சென்னை புத்தகக் காட்சி இலச்சினை வெளியீடு! தேதிகள் அறிவிப்பு!

50 ஆவது சென்னை புத்தகக் காட்சியின் இலச்சினை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார்...

25 செப்டம்பர் 2026, 6:47 pm IST
50 ஆவது சென்னை புத்தகக் காட்சியின் இலச்சினையை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார். - எக்ஸ்
பகிர்:

50 ஆவது பொன்விழா சென்னை புத்தகக் காட்சியின் இலச்சினை மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னைப் புத்தகக் காட்சி கடந்த 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் (2026) 50 ஆண்டுகளை நிறைவுச் செய்து பொன்விழாவை எட்டியுள்ளது. இதையடுத்து, 50 ஆவது ஆண்டுக்கான இலச்சினை மற்றும் இணையதளம் அகியவை இன்று (செப். 25) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

2027 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 7 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 50 ஆவது சென்னை புத்தகக் காட்சியின் இலச்சினை மற்றும் இணையதளம் ஆகியவற்றை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், பபாசி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் லயோலா மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

summary

The logo and website for the 50th Golden Jubilee Chennai Book Fair have been unveiled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments