மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!
மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது குறித்து...
மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை (செப். 26) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை அடுத்த 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் மேற்கொள்ள மின்வாரியம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கானப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன எனவும் செய்திகள் வெளிவருகின்றன.
Advertisement
Advertisement
பணியாளர் பற்றாக்குறையைச் சமாளித்து, மின் நுகர்வோருக்குத் தொய்வின்றி துல்லியமாகக் கணக்கீட்டை மேற்கொள்ள இந்தத் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை சார்பில் கூறப்படுகிறது. இத்தகைய தனியார் மயமாக்கல் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இது மின்கட்டண உயர்வு, முறைகேடுகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் "ஆள்" பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி, தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமுறைக்கு செல்வது எந்தவகையிலும் ஏற்கதக்கதல்ல. மின்வாரியத்தில் காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களை முறையான தேர்வுகள் மூலம் நிரந்தர அடிப்படையில் நேரடியாக அரசே நிரப்பிட வேண்டும்.
இதன் மூலமே வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நிரந்தரமான அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்டவற்றையும் நடைமுறைப்படுத்த முடியும் என்பதை, தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Communist Party of India urged on Saturday (Sept. 26) that electricity billing operations should not be handed over to the private sector.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.