கரண்ட் கட் ஆகலை... யாரோ வயரை பிடுங்கி விட்டாங்க: அமைச்சர் ஆனந்த் ஆவேசம்!
பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் மைக் வேலை செய்யாதது ஏன் என அமைச்சர் ஆனந்த் விளக்கமளித்தார்.
பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் மைக் வேலை செய்யாதது ஏன் என அமைச்சர் ஆனந்த் விளக்கமளித்தார்.
தமிழகத்தில் இடைதேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தாராபுரம் இடைதேர்தலில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து வாக்கு சேகரித்து அமைச்சர் ஆனந்த் இன்று தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, தாராபுரம் அடுத்த மருதூர் பகுதியில் 15 ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளை சந்தித்து குறைகள் மற்றும் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
Advertisement
Advertisement
அங்கு அவர் பேசுகையில் திடீரென மைக் வேலை செய்யவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டதா என அங்கிருந்தோர் சோதனை செய்தனர். ஆனால், மின்சாரம் தடைபடவில்லை எனக் கூறப்படுகிறது.
உடனடியாக அதுபற்றி ஆவேசமாகப் பேசிய அமைச்சர் ஆனந்த், “கரண்ட் கட் ஆகலை. யாரோ வயரை பிடுங்கி விட்டாங்க. நீங்கள் உடனே செய்தியை பெரிதாக்கி விடாதீர்கள். யாரோ ஒருத்தர் வயரை புடுங்கி விட்டு போய்விட்டார்கள். சின்னப் பிள்ளைகளை வைத்து கூட அதனைச் செய்கிறார்கள். என்ன செய்வது? அதுமாதிரி கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் செயல்படுகிறார்கள். நீங்கள் என்ன செய்தாலும் சரி. மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் ஆட்சியாகத் தான் நம் தமிழ்நாடு முதல்வரின் ஆட்சி இருக்குமென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக, தவெக அமைச்சர்கள் பேசிய பல கூட்டங்களில் மின்சாரம் தடைபட்டது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அமைச்சர் நிர்மல் குமார் இன்று கலந்துகொண்ட அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இன்று மின்சாரம் தடைபட்டதும் பேசுபொருளான நிலையில், அமைச்சர் ஆனந்த் இவ்வாறு பேசியுள்ளார்.
Minister Anand explained why the microphone was not working while he was speaking at a campaign meeting.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.