FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் இருக்கிறார்... ஆனால் மின்சாரம்தான் இல்லை: செந்தில் பாலாஜி

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்ட விவகாரத்தில் செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்வி பற்றி....

26 செப்டம்பர் 2026, 5:30 pm IST
செந்தில் பாலாஜி
பகிர்:

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் மின்சாரம் தான் இல்லை..

மின்சாரம் இல்லாததை விட, அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில் தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது..

Advertisement

Advertisement

விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார்..

மின்வாரியத்தின் தரப்பிலோ மின் தடை என கூறப்பட்டுள்ளது..

வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு Phase-ல வருது..

ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?

மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன?

இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..

மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை…

மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.. என்று தெரிவித்துள்ளார்.

summary

"Former DMK Minister Senthil Balaji has raised questions regarding the power outage that occurred at the Madurai Government Law College graduation ceremony attended by Electricity Minister Nirmal Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments