FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவே கூடுதல் கொள்முதல்: நிர்மல்குமார் விளக்கம்!

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது குறித்து அமைச்சர் நிர்மல்குமாரின் விளக்கம்.

14 அக்டோபர் 2026, 4:14 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே மின்வெட்டைத் தவிர்க்கும் நோக்கில் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

”மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்தே அதிக அளவில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் ஊழல் செய்வதற்கு எந்த வழிவகையும் இல்லை. பெரும்பாலான மாநிலங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 30-க்கும் அதிகமான விலையில் கொள்முதல் செய்கின்றன. ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களும் இதேபோன்று மின்சாரத்தை வாங்குகின்றன.

Advertisement

Advertisement

தீபாவளி காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அதிகபட்சமாக 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால், தீபாவளி காலத்திலும் கூடுதல் மின்சாரம் வாங்கப்படும்.

வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொள்முதலைவிட 5 முதல் 7 சதவீதம் வரை கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறதோ, அதற்கேற்ப எவ்வளவு செலவாகுமோ அந்த அளவிற்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஆனால், எதிர்க்கட்சிகள் இதனைத் தெரிந்தே விமர்சித்து வருகின்றன. ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறுவது தவறானது.

மற்ற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின்வெட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உப்பூரில் மின் உற்பத்தித் திட்டத்திற்காக ரூ.6,000 கோடி முதலீடு செய்யப்பட்டும், அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து, பொதுமக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதே கூடுதல் மின்சாரக் கொள்முதலின் நோக்கம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

summary

Minister Nirmalkumar's explanation regarding the procurement of electricity at a high price.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments