கரூர் பலி: ஆறாத ரணம், தீராத வலி, வேதனையான நிகழ்வு நடந்த நாள்... முதல்வர் விஜய் அஞ்சலி!
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி.
கரூர் பலி நிகழ்ந்து ஓராண்டு நினைவு நாளில், “தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்” என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பதிவிட்டுள்ளார்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
On the first anniversary of the Karur tragedy, Chief Minister C. Joseph Vijay posted, "It was the day a painful incident occurred—leaving an unhealed wound and unending agony in the hearts of the people of Tamil Nadu."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.