FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூர் கூட்ட நெரிசல் பலி: மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய உறவினர்கள்!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் படங்களுக்கு அவர்களுடைய உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியது குறித்து..

27 செப்டம்பர் 2026, 11:14 am IST
மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது... - படம் - தினமணி
பகிர்:

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் படங்களுக்கு அவர்களுடைய உறவினர்கள் மற்றும் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் தவெக சார்பில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர்களின் படங்கள் பொறிக்கப்படாமல் அவர்களின் பெயர்கள் மட்டும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி மேடையில் பொறிக்கப்பட்டிருந்தன. மேலும் படத்தின் கீழே வேலுச்சாமிபுரத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் ஆறு தட்டுகளில் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதன் பின்னர் காலை 9:30 மணிக்கு தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கட்சியின் மாநில துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மேடைக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து மேடையில் ஏறிய உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மேடையில் உயிர் நீத்த தங்களது உறவினர்களின் பெயர்களை பார்த்து கதறி அழுதனர்.

summary

Relatives of the victims of the Karur stampede paid tribute by lighting candles before their photographs on Sunday (Sept. 27).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments