FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூர் அருகே கணவரை பிரிந்த துக்கத்தில் மகளுடன் பெண் தற்கொலை!

கரூர் அருகே கணவரை பிரிந்த துக்கத்தில் மகளுடன் பெண் தற்கொலை கொண்டது தொடர்பாக....

மகளுடன் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட ரேகா. - படம்: தினமணி
பகிர்:

கரூர்: கரூர் அருகே கணவrஐ பிரிந்த துக்கத்தில், 11 வயது மகளுடன், பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட கருப்பபூரைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (42). விவசாயக் கூலி தொழிலாளி.

இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, கரூரை அடுத்த வாங்கல் முனியப்பனூரைச் சேர்ந்த சந்தானத்தின் மகள் ரேகா (40) என்பவரை திருமணம் செய்துகொண்டு கருப்பூரில் வசித்து வந்தார்.

Advertisement

Advertisement

இவர்களுக்கு ரீனுஸ்ரீ என்ற 11 வயது பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தை கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை விட்டு மகேஷ் குமார் பிரிந்து வேறு பெண்ணுடன் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் ரேகா தனது குழந்தையுடன் முனியப்பனூரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு, கருப்பூரில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்று குழந்தையுடன் வசித்து வந்தார். மேலும் கணவர் பிரிந்து சென்றதிலிருந்து கடும் மன உளைச்சலில் ரேகா இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கள் கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனது தம்பி மோகனுக்கு தொலைபேசியில் அழைத்த ரேகா, தனக்கு பயமாக இருப்பதாகவும், மிகுந்த மன உளைச்சலாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட மோகன் தனது அக்காவுக்கு ஆறுதல் சொல்லி காலையில் வந்து பார்ப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் காலை 5 மணி அளவில் மோகனின் செல்போனுக்கு கிணற்றில் - தேடவும் என வாட்ஸ்ஆப் செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன் கருப்பூருக்கு விரைந்து வந்துள்ளார்.

அங்கு வந்து வீட்டில் பார்த்தபோது குழந்தையுடன் ரேகாவை காணவில்லை என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, உறவினர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளில் மோகன் தேடியுள்ளார்.

அப்போது, அங்குள்ள தனியார் தோட்டத்து விவசாய கிணற்றில் ரேகாவும் குழந்தையும் சடலமாக மிதந்துள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கரூர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து ரேகா மற்றும் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

summary

Near Karur, a woman, grieving over her separation from her husband, died by suicide after jumping into a well along with her 11-year-old daughter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments