FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசின் அணுகுமுறை தவறானது: தமிழிசை சௌந்தரராஜன்

தவெக அரசின் அணுகுமுறை தவறானது என தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

28 செப்டம்பர் 2026, 4:23 am IST
தமிழிசை சௌந்தரராஜன் - (கோப்புப்படம்)
பகிர்:

தவெக அரசின் அணுகுமுறை தவறானது என தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

சென்னையில் எழும்பூரில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அமைச்சா் ராஜ்மோகன் எஸ்ஐஆா்-ஐ ஆரம்பத்தில் இருந்து தவெகவும் எதிா்க்கிறது என்கிறாா். எஸ்ஐஆா் இல்லையென்றால், ராஜ்மோகன் அமைச்சராக இருந்திருக்க முடியாது. விஜய் முதல்வராகவே இருந்திருக்க முடியாது. திமுக மீண்டும் வெற்றி பெற்றிருக்கும். எனவே, எஸ்ஐஆா்-க்கு தவெக முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

ராகுல் காந்தி, திமுக போன்றவா்கள் தோல்வியை மறைப்பதற்கு உண்மையான ஜனநாயக முறையை எதிா்த்து கொண்டிருக்கிறாா்கள். தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என அமைச்சா்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனா். இது மின்சாரத்துக்கே பொறுக்காமல், அமைச்சா்கள் பங்கேற்கும் நிகழ்வுகளிலேயே மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும், பட்டினப்பாக்கத்தில் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

தற்போது நடைபெற உள்ள இடைத்தோ்தல் தேவையில்லாதது. வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தவெக சொல்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக எம்எல்ஏ-க்களை தவெக விலைக்கு வாங்கிவிடுகிறது. இந்த இடைத்தோ்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது.

சட்டம்-ஒழுங்கை பற்றி கேள்விக் கேட்கக் கூடாது என சொல்வது ஜனநாயக முறையா? சா்வாதிகாரத்தை நோக்கி தவெக அரசு சென்று கொண்டிருப்பது நல்லதல்ல. வெளிப்படையான அரசு என்றால், எப்போதுமே வெளிப்படையான தகவல்களை வெளியிட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments