தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன்
தங்க மோதிரத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருப்பது பற்றி..
தங்க மோதிரத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே. குழந்தைகளுக்கு தேவை பால்.... தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள்... தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை..... சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர்கள் ஆனால் ஆவின் 14.5 லட்சம் லிட்டர்கள் தான் ஆவின் விநியோகிக்கிறது..
Advertisement
Advertisement
ஆவின் பால் பூத்துகளுக்கு செல்வதற்கு முன்னாலேயே அவை விற்று தீர்ந்து விடுகிறது. அதிக விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டி இருக்கிறது. இதுதான் இன்று தமிழக மக்கள் சொல்வது... தங்கம் மோதிரத்தை விட தங்களது தேவை இன்று பால் தான்.. என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கி வைக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Former BJP State President Tamilisai Soundararajan has stated that, rather than a gold ring, quality milk is the need of the hour for children today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.