புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்! முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!
மதுரையில் ரூ. 10 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தது பற்றி...
மதுரையில் ரூ. 10 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடக்கிவைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து காந்தி அருங்காட்சியகத்துக்கு சாலை வலம் மேற்கொண்டார்.
பின்னர், காந்தி அருங்காட்சியகம் வந்த அவர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
இதையடுத்து ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.
சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தமிழகப் பயணம் உள்ளிட்ட தகவல்கள், நவீன டிஜிட்டல் மற்றும் தொடுதிரை தொழில்நுட்பங்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய காட்சியமைப்புகளை முதல்வர் விஜய் பார்வையிட்டார்.
சுமார் இரண்டரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.
Chief Minister Vijay inaugurates Renovated Gandhi Museum in madurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.