ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு தள்ளுபடி
திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பற்றி....
திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர். பெரியகருப்பன் 83,364 வாக்குகளும், தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும் பெற்றனர்.
இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் சீனிவாச சேதுபதி வென்றதை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்துள்ளார். அதேசமயம் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் மனு ஏற்கப்பட்டுள்ளது.
The Madras High Court has dismissed the election petition filed by former DMK minister Periyakaruppan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.