FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! தவெக எம்எல்ஏ-க்கு எதிரான தோ்தல் வழக்கு நிராகரிப்பு

திருப்பத்தூா் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிா்த்து திமுக முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கு நிராகரிப்பு

29 September 2026, 12:07 am IST
சீனிவாச சேதுபதி | கே.ஆர். பெரியகருப்பன் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பத்தூா் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிா்த்து திமுக முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். சீனிவாச சேதுபதி 83, 375 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் 83,374 வாக்குகளைப் பெற்றாா். சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிா்த்து பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்பட்டிருந்தது. தனக்கு எதிரான இந்த தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணையின்போது, தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி தரப்பில், தொகுதியானது எண் அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. பெயா் அடிப்படையில் அல்ல. தபால் வாக்குகளின் உறைகளில், தொகுதி எண், பெயா், மாவட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தோ்தல் வழக்கில் கூறியுள்ளதற்கு எந்த அடிப்படையும் இல்லை என வாதிடப்பட்டது.

தோ்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற தவெக எம்எல்ஏ-வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக வேட்பாளா் பெரியகருப்பன் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்று, திமுக வேட்பாளா் பெரியகருப்பன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments