FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ஜெம் வீரமணி பங்கேற்ற விழாவில் மேடை நாகரிகம் கருதியே அவ்வாறு பேசியதாக அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருப்பது பற்றி....

16 வினாடிகள் முன்பு
அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பகிர்:

ஜெம் வீரமணி பங்கேற்ற விழாவில் மேடை நாகரிகம் கருதி அவர் குடும்ப நண்பர் என்ற வகையில் பேசினேன் என நாமக்கல்லில் அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22க்கு பிறகு பிறந்த ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 குழந்தைகளுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி குறித்து விழாவில் நான் பேசியது மேடை நாகரிகம் கருதி தான். எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்குமான தொடர்பு குறித்து விசாரித்தால் தெரியவரும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்றார். இந்த நிகழ்வின்போது, நாமக்கல் எம்எல்ஏ சி.எஸ்.திலீப், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்.சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் எல். மதுபாலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement

Advertisement

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜெம் வீரமணி பங்கேற்ற விழாவில் அவரை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் குடும்ப நண்பர் என்று தெரிவித்ததாக குற்றஞ்சாட்டினார். மேலும் அந்த விழாவின் புகைப்படத்தைக் காண்பித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தற்போது அமைச்சர் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Minister T. Lokesh Tamilselvan stated in Namakkal that he spoke at the event attended by Gem Veeramani keeping stage etiquette in mind and as a family friend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments