மினி பேருந்துகள் நாளை (செப். 30) வழக்கம்போல் இயங்கும்!
மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளதைப் பற்றி...
மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கொடியரசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் விடியல் பயண திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தை எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண பேருந்துகள் என விரிவுபடுத்தி ’வெற்றி பயணம்’ என முதல்வர் விஜய் அக். 2 முதல் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
வெற்றி பயணத் திட்டம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், தனியார் பேருந்துகளை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வெற்றி பயணத் திட்டத்தை தனியார் பேருந்துகளிலும் செயல்படுத்தக் கோரி செப். 29 நள்ளிரவு முதல் செப். 30 வரை தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை தனியார் பஸ்கள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கொடியரசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் நாளை (புதன்கிழமை) வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கும் மினி பஸ்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சம்மேளன மாநில உயர்மட்டக்குழுவின் ஆலோசனை முடிவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மினி பஸ்களும் வழக்கம்போல் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The President of the Tamil Nadu Mini Bus Owners' Federation has announced that mini-buses will operate as usual tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.