தாராபுரம் இனி விசில் சின்னத்தின் கோட்டை! அமைச்சர் செங்கோட்டையன்!
முதல்வர் விஜயை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டியதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளது பற்றி..
முதல்வர் விஜயை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டியதாகவும், தாராபுரம் இனி விசில் சின்னத்தின் கோட்டை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்திய பாமாவை ஆதரித்து முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரசாரத்தில் செங்கோட்டையன் பேசியதாவது,
Advertisement
Advertisement
வரலாற்றுச் சிறப்புமிக்க தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய் எதிர்கால தமிழகத்தை தாராபுரம் மக்களிடம் ஒப்படைத்துள்ளார்.
தாராபுரம் மக்கள் நாட்டின் விடிவெள்ளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும், தமிழ்நாட்டின் முதல்வரின் பணிகளை பார்த்தபிறகு, இவரைப் போன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் எந்த முதல்வரும் இல்லை என்ற கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே, தாராபுரம் வென்று, இனி விசில் சின்னத்தின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்டும் காலம்தான் வருகிற அக். 6ம் தேதி என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆகவே, ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டம், அமராவதி திட்டத்தை நிறைவேற்றும் ஆசை மக்களுக்கு இருக்கிறது. குடிநீர்த் திட்டம் இதுவரை இல்லாத பின்தங்கிய தாராபுரம் பகுதிக்கு ரூ. 147 கோடியே 90 லட்சம் குடிநீர் வழங்கும் ஆணை வழங்கும் நாளாக இந்த நாள் திகழ்ந்திடும்.
நான் மட்டும் அல்ல அண்ணா, இந்திய நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற வாசனம் ஒன்று இருக்கிறது. அதைப் போன்று நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சொன்னால் இந்திய நாடே வியக்கத்தகு நாளாக அமையும் என்று கூறி அவருடைய உரையை நிறைவு செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.