தங்கம், வெள்ளி விலை உயர்வு: செப்.30 நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 30) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து, ரூ. 1,09,680-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,120-க்கும் கிராமுக்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,640-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தங்கம் விலை புதன்கிழமை (செப். 30) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ.1,09,680-க்கு விற்பனையாகிறது.
புதன்கிழமை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ரூ.13,710-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 1,09,680-க்கு விற்பனையாகிறது.
அதேபோன்று வெள்ளி விலையும் உயா்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 245-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Rise in gold and silver prices: Status as of September 30!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.