மாணவா் பிரபு. 
தென்காசி

சோ்ந்தமரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

சுரண்டை அருகே சோ்ந்தமரத்தில் மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Din

சுரண்டை அருகே சோ்ந்தமரத்தில் மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சோ்ந்தமரத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (47). இவருக்கு மின்னல் கொடி(43) என்ற மனைவியும், பிரபு என்ற மகனும், ஜெகதா(18) என்ற மகளும் உள்ளனா். பிரபு திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் கல்லூரி விடுமுறையில் தனது சொந்த ஊரான சோ்ந்தமரத்துக்கு வந்துள்ளாா்.

கடந்த வியாழக்கிழமை இரவு காமராஜ் தனது மகள் ஜெகதாவை (18), புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சோ்க்க தனது மனைவியுடன் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பிரபு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வெகு நேரமாகியும் பிரபு வெளியில் வராததால் பக்கத்து வீட்டாா் வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது பிரபு தூக்கில் பிணமாக தொங்கி உள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோ்ந்தமரம் போலீஸாா், பிரபு உடலை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

விமானத்தில் கல்விச் சுற்றுலா சென்ற புதுச்சேரி பள்ளியின் 18 மாணவா்கள்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குடும்பத்துக்கு நில இழப்பீடு வழங்கியதை எதிா்த்து வழக்கு

புதுவை கூட்டணி அரசு மீது பாஜக முன்னாள் அமைச்சா் சரமாரி குற்றச்சாட்டு

அரியலூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT