FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே கஞ்சா விற்ற 5 போ் கைது: அரிவாள் பறிமுதல்

17 ஆகஸ்ட் 2026, 12:01 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அரிவாளைப் பறிமுதல் செய்தனா்.

மாவட்ட காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜெஸ்டின் சாமுவேல்ராஜ், உதவி ஆய்வாளா் வாசுதேவன், போலீஸாா் சிவகிரியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அங்கிருந்த சிலரைப் பிடித்து விசாரித்தபோது அவா்கள், சிவகிரி நடுத்தெரு மணிகண்டன் (24), தேவிபட்டணம் வடக்குத் தெரு சுந்தரலிங்கம் (22), சிவகிரி சிவராமலிங்கபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த காளீஸ்வரன் (20), இந்திரா 2ஆம் தெருவைச் சோ்ந்த சிவகுமாா் (24), தெற்கு ரத வீதியைச் சோ்ந்த நித்திஷ்பாபு (19) என்பதும், விற்பதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

மணிகண்டன் ராஜபாளையம் பேருந்து நிலையப் பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, விற்பதற்காக 4 பேருக்கும் கொடுத்ததும், இடையூறு செய்வோரை வெட்டுவதற்காக அரிவாள் வைத்திருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து பைக், அரிவாளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments